தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடிய இருவர் கைது!

கன்னியாகுமரி: பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட குளம், சுற்றுப்புற பகுதிகளில் உள்ள உடும்பு, மலைப்பாம்பு, மரநாய் போன்றவற்றை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

two-arrested-for-hunting-wildlife-animals
two-arrested-for-hunting-wildlife-animals

By

Published : May 24, 2020, 11:59 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் அச்சங்குளம் பகுதி பறவைகள் சரணாலயத்தில் உள்ள குளத்தில் இருவர் வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அங்கு சென்ற வனத்துறையினர், மீன் பிடித்துக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்க ராஜ், சிவகுமார் இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், சந்தேகமடைந்த வனத்துறையினர் அவர்களின் செல்போனை ஆய்வு செய்தபோது, இருவரும் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து ஆமை, மலைப்பாம்பு, உடும்பு, மரநாய் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டது தெரியவதுள்ளது.

இதையடுத்து, மாணிக்கராஜ், சிவக்குமாரை கைது செய்த வனத்துறையினர், அவர்களது நண்பர்களான தினேஷ், தாவீது ஆகியோரை தேடிவருகின்றனர். மேலும், தடைசெய்யப்பட்ட குளத்தில் மீன் பிடித்ததற்காக மாணிக்கராஜிற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஒரே பகுதியில் இரு சிறுமிகள் பாலியல் வன்புணர்வு!

ABOUT THE AUTHOR

...view details