தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரியில் இரண்டரை டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்! - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி: கேரளாவுக்கு கடல்வழியாக கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட இரண்டரை டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இரண்டரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்
இரண்டரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்

By

Published : Nov 11, 2020, 4:03 PM IST

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் கன்னியாகுமரி வாவத்துறை கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு காவல் ஆய்வாளர் நவீன் தலைமையில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள ரட்சகர் தெருவில் ஒரு பாழடைந்த வீட்டில் 101 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டரை டன் எடையுள்ள ரேஷன் அரிசியை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அதை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களிடம் ஓப்படைத்தனர்.

மேலும் அரிசி மூட்டைகளை இந்தப் பகுதியில் பதுக்கி வைத்திருந்தது யார்? கேரளாவுக்கு கடல்வழியாக கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: பொள்ளாச்சியில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details