தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரப்பர் தோட்டத்தை அழிக்க முயற்சி - காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் - காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி: அரசு ரப்பர் கழகத்தை அழிக்கும் முயற்சியாக 2ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

congress party
congress party

By

Published : Aug 14, 2020, 7:15 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் தோட்ட கழகத்தின் 2ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் வனத்துறையிடம் ஒப்படைப்பதைக் கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அரசு ரப்பர் கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது குறித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, "தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் மட்டும் தான் அரசு ரப்பர் கழகம் இயங்கி வருகிறது. 1953ஆம் ஆண்டு முதல் இயங்கி வருவதோடு மாவட்டத்தின் பொருளாதார வளர்சிக்கு முக்கிய பங்காற்றி வரும் இந்த ரப்பர் கழகத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அண்மையில், அரசு ரப்பர் தோட்டத்தின் 2ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோன்று தற்போது, மேலும் 2ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைத்து ரப்பர் கழகத்தை அழிக்கும் முயற்சியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். ரப்பர் பால் உற்பத்தி கணிசமாக குறைந்து வருவாய் இழப்பு ஏற்படும். எனவே இதை தடுக்க நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:தனிமைப்படுத்தப்பட்டோருக்கு ரூ.2500 மதிப்பிலான தொகுப்பு: முதலமைச்சர் தொடக்கிவைப்பு

ABOUT THE AUTHOR

...view details