தமிழ்நாடு

tamil nadu

காசநோயின் தன்மையை கண்டறிய அரசு மருத்துவமனையில் அதிநவீன ட்ரூனாட் கருவி

By

Published : Sep 26, 2020, 6:58 AM IST

கன்னியாகுமரி: குழித்துறை அரசு மருத்துவமனையில் காசநோயின் தன்மை குறித்து துல்லியமாக அறிந்து சிகிச்சை அளிப்பதற்கான அதிநவீன ட்ரூனாட் கருவி செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

ட்ரூனாட் கருவி
ட்ரூனாட் கருவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டிற்கு 1, 500 காசநோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 40க்கும் மேற்பட்ட நோயாளிகள் கூட்டுமருந்து சிகிச்சை பலனளிக்காமல் காசநோயாளிகளாகவே மாறிவிடுகின்றனர்.

இந்நிலையில் காசநோயின் தன்மையை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் ட்ரூனாட் என்னும் அதிநவீன கருவி குழித்துறை அரசு மருத்துவமனையில் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

கூட்டு மருந்துக்கு கட்டுப்படாத காசநோய் தன்மையை கண்டறிய சளி மாதிரிகளை இந்த கருவியில் சோதித்தால் ஒன்றரை மணி நேரத்தில் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

இக்கருவியை கன்னியாகுமரி மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ஜான் பிரிட்டோ தொடங்கி வைத்தார். இந்த நவீன கருவி மூலம் பரிசோதனைகளை நோயாளிகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளும் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். மாவட்டத்தில் வேறு எங்கும் இந்த பரிசோதனை கருவி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details