கரோனா வைரஸ் காரணமாக மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பஸ், ரயில் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன.
திருச்சி - நாகர்கோவில் இடையே ரயில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
கன்னியாகுமரி: திருச்சி - நாகர்கோவில் இடையே ரயில் போக்குவரத்து இன்று (ஜூன் 1) முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் குடிபெயர்ந்த தொழிலாளர்களைசொந்த ஊர்களுக்கு அனுப்ப குஜராத், பிகார் போன்ற வட மாநிலங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்தச் சூழலில் இன்று (ஜூன் 1) முதல் நான்கு வழித்தடங்களில் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி இன்று (ஜூன் 1) காலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து குமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு 19 பெட்டிகளுடன் இன்டர்சிட்டி ரயில் புறப்பட்டது. இன்று முதல் நாள் என்பதால் ரயில் பெட்டிகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.