தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சரக்குப் பெட்டக மாற்று முனையம் திட்டம்: அறப்போராட்டத்தில் இறங்கிய மீனவர்கள் - சரக்கு பொட்டக மாற்று முணையம் திட்டம் கைவிடல்

கன்னியாகுமரி: சரக்குப் பெட்டக மாற்று முனையம் திட்டத்திற்கு எதிராக கீழமணக்குடி கடற்கரை கிராமத்தில் கடல்வழி, தரைவழியில் மீனவர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

fisher
fisher

By

Published : Mar 27, 2021, 10:15 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் - கீழமணக்குடி இடையே உள்ள கடல் பகுதியில் 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டுச் சரக்குப் பெட்டகத் துறைமுகம் அமைக்க, மத்திய அரசு 2017ஆம் ஆண்டு முயற்சி மேற்கொண்டது. இதற்கு மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து பல போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மக்களவைத் தேர்தலின்போது தேர்தலில் சரக்குப் பெட்டகத் துறைமுகத்துக்கு எதிராக மீனவ மக்கள் பரப்புரைகள், போராட்டங்களைத் தீவிரப்படுத்தினர். மேலும் மக்களவைத் தேர்தலில் இந்தப் பகுதியில் காங்கிரஸ் கட்சி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அறப்போராட்டத்தில் இறங்கிய மீனவர்கள்

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலின் தேதி அறிவிக்கும் சில நாள்களுக்கு முன்பு தூத்துக்குடி வஉசி துறைமுகம் மூலம் கன்னியாகுமரி சரக்குப் பெட்டகத் துறைமுகப் டெண்டர் விடப்பட்டது. இதுபோன்ற திட்டம் நிரந்தரமாகக் கூடாது என வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழமணக்குடி, தென்தாமரைகுளம், மணக்குடி, பள்ளம், ஆரோக்கியபுரம், கோவளம் போன்ற பத்துக்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் கடல்வழி, தரைவழி அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி கடல்வழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் படகுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கறுப்புக் கொடியைக் கட்டினர்.

இன்று (மார்ச் 27) கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையின்போது முதலமைச்சர் பழனிசாமி சரக்குப் பெட்டகத் துறைமுகம் வரவே வராது எனத் திட்டவட்டமாகக் கூறினார். இருப்பினும் இதை நம்பாத மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் மத்திய அரசு உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details