கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் முறையாக ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு திருநங்கை ராபியா, நாகர்கோவில் அடுத்த சகாய நகர் ஊராட்சிப் பகுதியில் போட்டியிடுகிறார். கடந்த சில தினங்களாக அப்பகுதியில் அவர் பரப்புரை செய்தார். இதனிடையே இன்று திருநங்கை ராபியா, திருநங்கைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
தேர்தலில் போட்டியிடும் திருநங்கைக்கு மிரட்டல்... மாவட்ட ஆட்சியரிடம் புகார்!
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே ஊராட்சி மன்றத் தலைவராகப் போட்டியிடும் திருநங்கை பரப்புரை செய்யும் இடங்களில் முகமூடி அணிந்த சில இளைஞர்கள் மிரட்டுவதாக திருநங்கை ராபியா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தார்.
transgender-threatened-petition
அந்த புகாரில், ’நான் பரப்புரை செய்ய திருநங்கைகளுடன் செல்லும் இடங்களில் மோட்டார் சைக்கிளில் சில இளைஞர்கள் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வந்து மிரட்டல் விடுத்துவருகின்றனர். இதனால் எனக்கும் என் உடன் வருபவர்களுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுத்து நான் முறையாக பரப்புரை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: மூடப்படும் டாஸ்மாக்; முண்டியடிக்கும் குடிமகன்கள்!