தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரி ரயில் நிலையத்திலிருந்து 9 நாட்களுக்கு ரயில் சேவைகளில் மாற்றம்.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு! - todays news in tamil

Kanyakumari Railway Station: கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை திட்டத்தின் கீழ் தண்டவாள இணைப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், நாளை மறுநாள் (நவ.26) முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி ரயில் நிலையத்திலிருந்து 9 நாட்களுக்கு ரயில் சேவைகளில் மாற்றம்…தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
கன்னியாகுமரி ரயில் நிலையத்திலிருந்து 9 நாட்களுக்கு ரயில் சேவைகளில் மாற்றம்…தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 11:49 AM IST

கன்னியாகுமரி:கன்னியாகுமரிரயில் நிலையத்தில் தற்போது 3 நடைமேடைகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு கன்னியாகுமரி - திருவனந்தபுரம் ரயில் பாதை இரட்டிப்பாக்கும் திட்டத்தின் கீழ் புதிதாக 2 நடைமேடைகளும், சுற்றுலாப் பயணிகள் வரும் ரயில்கள் நிறுத்தி வைப்பதற்கு ஒரு நடைமேடை என்றும், மொத்தம் 3 புதிய நடைமேடைகள் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ள புதிய இருப்புப் பாதை, தற்போது ரயில்கள் இயங்கும் பழைய இருப்புப் பாதையுடன் இணைக்கப்பட உள்ளன. இதற்காக வருகிற 24ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை நாகர்கோவில் - கன்னியாகுமரி, திருநெல்வேலி - நாகர்கோவில், திருவனந்தபுரம்- நாகர்கோவில் மார்க்கங்களில் ரயில்கள் இயக்கத்தில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே துறை அறிவித்துள்ளது.

மேலும், இந்த பணிகள் பகல் நேரத்தில் நடக்க இருப்பதால், கன்னியாகுமரி ரயில் நிலையத்திலிருந்து பகல் நேரத்தில் இயங்கும் சில ரயில்களில் மாற்றங்கள் அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி ரயில் நிலையத்திலிருந்து காலை, மாலை, இரவு நேரங்களில் இயங்கும் ரயில்களில் எந்த மாற்றமும் இல்லாமல் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாற்றம் செய்யப்பட்ட ரயில்கள்:

  • நாகர்கோவில்-கன்னியாகுமரி (எண் 06643) பயணிகள் ரயில் 26ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி
    வரை 9 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • கொல்லம்-கன்னியாகுமரி மெமு ரயில் இரு மார்க்கங்களிலும் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையிலும், டிசம்பர் 2 முதல் 4ஆம் தேதி வரை என மொத்தம் 8 நாட்களுக்கு முழுமையாக இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
  • புனே-கன்னியாகுமரி (எண் 16381) ரயில் நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே 26ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  • பெங்களுர்- கன்னியாகுமரி (எண் 16526) ரயில் 8 நாட்களுக்கு நாகர்கோவில்- கன்னியாகுமரி வரை பகுதியாக
    8 நாட்களுக்கும், திருவனந்தபுரம்- கன்னியாகுமரிக்கு ஒரு நாளும் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாகவும், இவ்வாறு அதே நாட்களில் ரத்து செய்யப்படுகிறது.
  • கன்னியாகுமரி-புனலூர் ரயில் நாகர்கோவில் டவுண்- கன்னியாகுமரி இடையே 9 நாட்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  • புதுச்சேரி - கன்னியாகுமரி ரயில் திருநெல்வேலி – கன்னியாகுமரி இடையே 26ஆம் தேதி ஒரு நாள் மட்டும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கமாக கன்னியாகுமரி - புதுச்சேரி ரயில் 27ஆம் தேதி கன்னியாகுமரி - திருநெல்வேலி மார்க்கமாக ஒருநாள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  • ஹவுரா - கன்னியாகுமரி ரயில் நாகர்கோவில்- கன்னியாகுமரி இடையே 27ஆம் தேதி ஒருநாள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  • கன்னியாகுமரி - திப்ருகர் ரயில் 3 நாட்களுக்கு கன்னியாகுமரி – நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  • கன்னியாகுமரி - கத்ரா ரயில் டிசம்பர் 1ஆம் தேதி ஒரு நாள் மட்டும் பகுதியாக கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.
  • தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா ரயில் 3ஆம் தேதி ஒரு நாள் மட்டும் திருநெல்வேலி –நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கமாக இந்த ரயில் 4ஆம் தேதி நாகர்கோவிலுக்கு பதிலாக திருநெல்வேலியில் இருந்து புறப்படும்.
  • சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி ரயில் 3ஆம் தேதி பகுதியாக நாகர்கோவில்- கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கமாக இந்த ரயில் 4ஆம் தேதி கன்னியாகுமரிக்கு பதிலாக நாகர்கோவிலில் இருந்து புறப்படும்.
  • நிஜாமுதீன் - கன்னியாகுமரி ரயில் வருகிற 2ஆம் தேதி அன்று பகுதியாக நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது.
  • தாம்பரம் - நாகர்கோவில் ரயில் ஒரு நாள் மட்டும் 4ஆம் தேதி பகுதியாக திருநெல்வேலி –நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக இந்த ரயில் 4ஆம் தேதி நாகர்கோவிலுக்கு பதிலாக திருநெல்வேலியில் இருந்து புறப்படும்.
  • கன்னியாகுமரி- புனே ரயில் 4ஆம் தேதி அன்று பகுதியாக நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தது.

மேலும், மக்கள் பயணம் செய்ய சுமார் 60 முதல் 100 நாட்களுக்கு முன்பாகவே முடிவு செய்து பயணச்சீட்டு முன்பதிவு செய்து விடுகின்றனர். இப்போது ரயில் சேவைகள் திடீர் ரத்து என அறிவிக்கப்பட்டது பயணிகளுக்கு சிரமம் அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை, கன்னியாகுமரி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் - பொதுமக்கள் சிரமம்!

ABOUT THE AUTHOR

...view details