கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுச் சங்க அலுவலர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர்.
புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்த விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. மேலும், கூட்டுறவுச் சங்கம் குறித்த கையேடும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.