தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நவராத்திரி விழா 2020: பத்மநாபபுரத்திலிருந்து புறப்பட்ட சுவாமி விக்கிரக ஊர்வலம் - navaratri divine procession 2020

கன்னியாகுமரி: திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவிற்காக சுவாமி விக்கிரக ஊர்வலம் பத்மநாபபுரம் அரண்மையில் இருந்து புறப்பட்டது.

பாரம்பரிய முறைப்படி சுவாமி விக்கிரக ஊர்வலம்
பாரம்பரிய முறைப்படி சுவாமி விக்கிரக ஊர்வலம்

By

Published : Oct 15, 2020, 1:11 AM IST

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் கேரளா திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கிய காலகட்டத்தில், பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் தலைநகரம் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

பின்னர், திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் வைப்பதற்கான பத்மநாபபுரம் தேவார கட்டு சரஸ்வதி, குமாரகோயில் முருகன் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை ஆகிய மூன்று விக்ரகங்களும், பண்டைய திருவிதாங்கூர் மன்னரின் உடைவாளும் திருவனந்தபுரத்திற்கு பவனியாக நடந்து கொண்டு செல்லப்படத் தொடங்கியது.

தமிழ்நாடு கேரள மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் இருமாநில மக்களும் ஒன்றிணைந்து நடத்தும் இவ்விழாவில் தமிழ்நாடு - கேரள எல்லையான களியக்காவிளையில் கேரள அரசின் பிரதிநிதிகள் விக்கிரகங்களை வரவேற்று திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்வார்கள்.

திருவனந்தபுரத்தில் விக்கிரகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல் துறை உள்பட பல்வேறு வகையான அணிவகுப்பு மரியாதை நடைபெறும். இந்தப் பாரம்பரியமான நிகழ்ச்சி இந்தாண்டு கரோனாவால் எளிமையாக நடத்துவதற்கு கேரள அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி விக்ரகங்களை பவனியாக கொண்டு செல்லாமல் வாகனங்களில் பத்மநாபபுரத்தில் இருந்து கேரளாவுக்கு ஏற்றிச் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.

இதனிடையே, நூற்றாண்டு பழமை வாய்ந்த பாரம்பரிய நிகழ்ச்சியை மாற்றும் வகையில் கேரள அரசு தற்போது விக்கிரகங்களை வாகனங்களில் ஏற்றிச் செல்ல முடிவு எடுத்திருப்பது வேதனை அளிப்பதாக உள்ளதாகவும், கரோனா தடுப்பு விதிமுறைகளின்படி சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் பாரம்பரிய முறையில் விக்ரகங்களை பவனியாக எடுத்துச் செல்ல அனுமதிக்க கேட்டும், இந்து இயக்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.

விக்ரகங்களை பவனியாக எடுத்து செல்லக் குமரி மாவட்ட நிர்வாகமும், கேரள அரசும் அனுமதி அளித்தது. இதையடுத்து, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகம் பத்மநாபபுரம் அரண்மனை வந்தடைந்தது. நேற்று (அக்.14) காலை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து தேவாரக்கட்டு சரஸ்வதி குமாரகோயில் முருகன் விக்ரகங்களும் மன்னரின் உடைவாளும் பாரம்பரிய முறையில் அரசு மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டன.

பாரம்பரிய முறைப்படி சுவாமி விக்கிரக ஊர்வலம்

பத்மநாபபுரத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், கேரளா அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு கேரள அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:பாரம்பரியமிக்க நவராத்திரி விழாவை நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details