கன்னியாகுமரி: பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வணிக வளாகங்கள் திட்டுவிளையில் உள்ளன. நாகர்கோவிலுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய முக்கிய வியாபார மையமாக திட்டுவிளை திகழ்ந்து வருகிறது. மலைவாழ் மக்களின் அத்தியாவசியப்பொருட்களை வாங்கிச்செல்லும் அளவிற்கு முக்கிய வியாபார தலமாக திட்டுவிளை உள்ளது. பூதப்பாண்டி பேரூராட்சிக்குச் சொந்தமான சுமார் 50-க்கும் மேற்பட்ட கடைகள் வணிக வளாகத்தில் உள்ளன.
இந்த வணிக வளாகத்தில் மிகப்பெரிய மீன் மார்க்கெட் நடைபெற்று வருகிறது. அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் கடைகளும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. திமுக ஒன்றியச்செயலாளர் தூண்டுதலின்பேரில் அலுவலர்கள் கடையின் வாடகையை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது பொது ஏலம் விட்டு இதுவரை தொழில் செய்து வந்தவர்களை அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
35 முதல் 50 ஆண்டு காலமாக அதிலிருந்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளை மாற்றி, புதிய நபர்களுக்கு கடைகளைக் கொடுக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான பொது ஏல முறையினை அறிவித்துள்ளது. இதற்கு வியாபாரிகளும், பொதுமக்களும் எதிர்ப்புத்தெரிவித்து பூதப்பாண்டி பேரூராட்சிக்குச் செந்தமான வணிக வளாகத்தை இன்று (ஆக. 22) முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இது முழுக்க முழுக்க தோவாளை திமுக ஒன்றிய நிர்வாகிகளுடைய தூண்டுதலின் பேரில் அலுவலர்கள் செயல்படுவதாகவும், திமுகவினரை கடைகளில் அமரவைப்பதற்கு முயற்சி நடப்பதாகவும் தோவாளை உள்நாட்டு மீனவர் சங்கத் தலைவர் சகாயம் குற்றம் சாட்டியுள்ளார்.
வணிக வளாகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம் இதையும் படிங்க:விரைவில் காங்கிரஸுக்கு புதிய தலைவர்... மணிசங்கர் அய்யர்