கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் வசித்து வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ஜெயமோகன் அதே பகுதியில் இருக்கும் ஒரு பலசரக்கு கடையில் தோசை மாவு வாங்கி இருக்கிறார். அப்போது, அந்த மாவு புளித்திருப்பதாகக் கூறி அதை செல்வத்தின் மனைவி மீது வீசி எறிந்துள்ளார். இதில் செல்வத்துக்கும் ஜெயமோகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது பின்னர் இது தொடர்பாக ஜெயமோகன் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் செல்வத்தின் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
ஜெயமோகன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - வணிகர் சங்க பேரவை - எழுத்தாளர் ஜெயமோகன்
கன்னியாகுமரி: மாவு கடைக்காரர் உடன் சண்டையிட்ட எழுத்தாளர் ஜெயமோகன் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
jayamohan
இந்நிலையில், இந்த விவகாரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்தவர்கள் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
Last Updated : Jun 17, 2019, 7:07 PM IST