கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவுக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் பொறுப்பேற்று ஒரு வருடம் ஆகிறது. இந்த ஊராட்சி பகுதிகள் அனைத்தும் மலையடிவார பகுதிகளாகவும், அதிக காற்று வீசும் பகுதிகளாகவும் இருப்பதால் தெரு விளக்குகள் அடிக்கடி பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் தெரு விளக்குகள் பராமரிப்பு ஊராட்சி மன்ற தலைவரின் கட்டுப்பாட்டில் இருந்தது.
தற்போது அரசு அந்த பணியினை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால், பணிகள் முறையாக நடக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் ஊராட்சி தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.