கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலையோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் பாலமோர், மாராமலை உள்ளிட்ட பல்வேறு மலை பகுதிகளில் இருந்து திடீரென காட்டாற்று வெள்ளம் வந்ததால் கீரிப்பாறை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாப்பத்து பாலம் மூழ்கியது.
குமரியில் கனமழை: ஆற்று வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் மீட்பு! - got rescued
கன்னியாகுமரி: திடீர் மழை காரணமாக கீரிப்பாறை, காளிகேசம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள், ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்டோரை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
ஆற்று வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலாப்பயணிகள் மீட்பு
இந்நிலையில், காளிகேசத்திற்கு இன்று காலை ரப்பர் பால் எடுப்பதற்காகச் சென்ற ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், அருவியில் குளிக்கச் சென்ற சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் ஆற்றை கடக்க முடியாமல் சிக்கித் தவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து அங்குச் சென்ற நாகர்கோவில் தீயணைப்பு துறையினர் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காளிகேசம் அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.