கன்னியாகுமரி:முக்கிய சுற்றுலாத் தலங்களுள் முக்கியத்துவம் வாய்ந்தது திற்பரப்பு அருவி இடமாகும். இது குமரி குற்றாலம் என்றழைக்கபடும் திற்பரப்பு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவது வழக்கம். இதனால் இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் வார விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் இன்று (செப்- 18) சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணபட்டது. கடந்த சில நாள்களாக கனமழை மற்றும் அணைகளில் நீர்திறப்பு காரணமாக அருவியில் அதிகளவில் தண்ணீர் கொட்டியது.