கன்னியாகுமரி:தமிழ்நாட்டின் சர்வதேச சுற்றுத் தலங்களில் ஒன்றாக கன்னியாகுமரி காணப்படுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். குறிப்பாக சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை காண்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும்.
அந்த வகையில், வார விடுமுறையை முன்னிட்டு சூரிய உதயத்தை காண அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் பெரும் திரளாக கடற்கரையில் திரண்டனர். சூரிய உதயத்தை செல்பி எடுத்தும், கடலில் குளித்தும் உற்சாகம் அடைந்தனர். வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வந்துள்ளனர்.