கன்னியாகுமரி:கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால், பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 17ஆம் தேதியிலிருந்து அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து மாவட்டத்தில் பெய்த மழை குறைவானதை அடுத்து, நேற்று பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதனையடுத்து திற்பரப்பு அருவியில் 7 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, அருவியின் ஒரு பகுதியில் இன்று (அக்.24) முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதியளித்தது.