கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை மற்றும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வந்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் பெய்த கனமழையால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களுள் ஒன்றான திற்பரப்பு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடைவித்திருந்தது.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று மழை குறைந்ததால் கோதையாற்றில் பாய்ந்த தண்ணீரின் அளவும் சற்று மிதமானது. இதனையடுத்து திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதியளிக்கபட்டது. அதை தொடர்த்து குறைத்த அளவிலான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்த்தனர்.