தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒமைக்ரான் அச்சுறுத்தல்: சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளாதால், கன்னியாகுமரியில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூவர் சிலை
திருவள்ளூவர் சிலை

By

Published : Dec 17, 2021, 4:39 PM IST

கன்னியாகுமரி: தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் தொற்று போட்ஸ்வானா, ஹாங்காங், சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிவேகமாக பரவிவருகிறது.

இதுவரை 55க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதால் மக்கள் பீதியில் உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை ஒன்பது பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கலாம் என முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அதில் ஒருவருக்கு தொற்ரு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கல் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்டத்தில் உள்ள கடற்கரை, நீர்வீழ்ச்சி, பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல பொதுமக்களுக்கு மூன்று நாள்கள் தடை விதித்துள்ளது. அதன்படி வரும் 31ஆம் முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான்.. மக்கள் பீதி..

ABOUT THE AUTHOR

...view details