வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக வலுப்பெற்று தென்மாவட்ட கடலோரப் பகுதிகளைத் தாக்கும் என எச்சரிக்கைவிடப்பட்டிருந்தது.
குமரியில் சுற்றுலாப் படகுப் போக்குவரத்து இயக்கம் - puravi cyclone
கன்னியாகுமரி: புரெவி புயல் எதிரொலியாக திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலாப் படகுப் போக்குவரத்து இயக்கப்பட்டது.
![குமரியில் சுற்றுலாப் படகுப் போக்குவரத்து இயக்கம் puravi cyclone](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:24:30:1607237670-tn-knk-01-kanyakumari-boating-start-script-tn10005-06122020115011-0612f-1607235611-218.jpg)
puravi cyclone
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை செய்திருந்தது. இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்குச் செல்லும் சுற்றுலாப் படகுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நான்கு நாள்களுக்குப் பிறகு இன்று (டிச. 06) காலை முதல் படகுப் போக்குவரத்துச் சேவை இயக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.