கன்னியாகுமரி: கன்னியாகுமரி ஒரு புறம் முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலைகளும் மறுபுறம் முழுவதும் நீண்ட கடற்கரையும் இயற்கையாகவே கொண்ட ஒரு மாவட்டம். இதனால் மலை வளமும், கடல் வளமும் உள்ள பெரும்பாலான பகுதிகள் சுற்றுலா மையங்களாக இயற்கையாகவே அமைந்துள்ளது. மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ள மணக்குடியில் சுற்றுலா திட்டத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பரந்து விரிந்து காணப்படும் மாங்குரோவ் காடுகளில் பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள், இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து பல விதமான பறவைகள் என பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் கடந்து இங்கு ஒவ்வொறு ஆண்டும் வலசை செல்வது வழக்கம். இங்கு வரும் பறவைகளை பார்க்க கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகரித்து காணப்படும். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் காயலில் சென்று பறவைகளை பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:மேடம் நீங்களா..? ஷர்மிளாவுக்கு ஷாக் கொடுத்த வானதி.. கோவை பேருந்தில் கலகல பயணம்!
காயலில், படகு சம்பந்தமான பல்வேறு விளையாட்டுகள் மற்றும் பயனிகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் உடன் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடலும் கடலை சார்ந்த காயலில் படகுகள் இயக்குவது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து வந்தது. அந்த வகையில் தனியார் மூலம் சுற்றுலா படகுகள் இயக்கும் திட்டத்திற்கு வெள்ளோட்ட பணிகள் நடைபெற்றது.