சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு உள்ளூர் வாசிகள், வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரி கடல் பகுதிகளில் தற்போது வீசிவரும் சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றத்தால் கடலின் அலைகள் ஆக்ரோஷமாக காணப்படுகிறு. இந்நிலையில் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் கடலின் உள்ளே உள்ள பாறைகளின் மீது ஏறி நின்று புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.
இதுபோன்ற ஆபத்தான செயலால், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கவலைத் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கவும், பாதுகாக்கவும் கடலோரப் பாதுகாப்பு காவல் துறையினர், கடற்கரையின் ஆபத்தான பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் கரோனா காலம் என்பதால், தற்போது கடலோரப் பாதுகாப்பு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை.