தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள் விற்பனை அமோகம்; டாஸ்மாக் மூடலால் இயற்கை பானத்தை நாடும் குடிமகன்கள்! - கள் விற்பனை அமோகம்

கன்னியாகுமரி: டாஸ்மாக் மூடப்பட்டுள்ளதையடுத்து மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கள் விற்பனை செய்வதால் வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

toddy sales in kanyakumari
toddy sales in kanyakumari

By

Published : Apr 5, 2020, 12:07 AM IST

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. நோய் பரவலைத் தடுக்கும் வகையில் பொது இடங்களில் மக்கள் கூடாமல் இருக்க தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் கன்னியாகுமரி மாவட்டம் சீதாபால், தெள்ளாந்தி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள் விற்பனை களைகட்டி வருகிறது.

இதனை அருந்த மதுப்பிரியர்கள் குவிந்த வண்ணம் இருப்பதால் காவல் துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். காவல் துறையினர் தீவிர வாகனச் சோதனைகளில் ஈடுபட்டும் கூட கள் விற்பனை செய்யும் இடங்களுக்கு வருவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வைரஸ் பரவுவதைத் தடுக்கும் அரசின் நடவடிக்கைகளை மீறும் செயலாக உள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்டக் காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டாஸ்மாக் மூடலால் இயற்கை பானத்தை நாடும் குடிமகன்கள்!

ABOUT THE AUTHOR

...view details