தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓ சாமியோ அணில் பிடிக்கணுமா.. மின்வாரிய ஊழியரின் திருமண பேனர் வைரல் - electricity employee

இரணியல் கோணத்தில் மின் வாரிய ஊழியர் ஒருவரின் திருமணத்திற்கு 2-கே கிட்ஸ் நண்பர்களால் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

திருமண விழாவில் அணிலின் அலப்பறைகள்
திருமண விழாவில் அணிலின் அலப்பறைகள்

By

Published : May 17, 2022, 11:57 AM IST

கன்னியாகுமரி: இரணியல் கோணத்தில் "மின் வெட்டு" அணில் பிடிக்க ரூ-100, பியூஸ் கட்ட ரூ-200 என கவுண்டமணி, செந்தில் காமெடி வரிகளுடன் மின்வாரிய ஊழியர் ஒருவரின் திருமணத்திற்கு 2-கே கிட்ஸ் நண்பர்களால் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

நண்பர்களின் திருமணம் என்றால் புதுமண தம்பதியினரை பல திரைப்பட கேரக்டர்களில் சித்தரித்து காமெடி வரியை வைத்து விதவிதமாக போஸ்டர் அடித்து ஒட்டுவதும் பிளக்ஸ் பேனர் வைப்பதும் 2-கே கிட்ஸ்களின் வாடிக்கையாகி விட்டது.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் கோணம் பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியரான வினோஜி என்பவருக்கும் பட்டதாரி பெண் நிஷா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அவர்களை வாழ்த்தும் விதத்தில் "இ.கே.எம் ராக்ஸ்" என்ற 2-கே கிட்ஸ் நண்பர்கள் குழுவால் பிளக்ஸ் பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு

அதில் திருமண தம்பதியை குறவன் குறத்தி போல் சித்தரித்து இரணியல் கோணத்தில் "மின் வெட்டு" ஓ சாமியோ அணில் பிடிக்கணுமா அணில் ஒரு அணிலிக்கு 100-ரூபாய் தான் சாமி என்று புதுப்பெண் கேட்பது போலவும், எண்ணோ எக்கோ பீஸ் கட்டணுமா ஒரு வீட்டிற்கு 200-ரூபாய் தான் என்று புது மாப்பிள்ளை கேட்பது போலவும் அதற்கு அட கொக்கமக்கா உலக மகா தொழில்டா என கவுண்டமணியின் காமெடி வரிகள் தொடங்கி அது இல்லண்ணே எத்தனை வீட்டுல பீஸ் கட் பண்ணியிருப்பான் இப்ப அவனுக்க பீஸ் பிடுங்க ஒருத்தி வந்துட்டா என செந்தில் பதில் சொல்லும் காமெடி வரிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த பிளக்ஸ் பேனர் தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்து வருவதோடு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: சுனாமி வந்தால் என்ன செய்வது?.. கன்னியாகுமரியில் கடைகள் அமைக்க அரசு எதிர்ப்பு..

ABOUT THE AUTHOR

...view details