கன்னியாகுமரி மாவட்டம்ஆசாரிப்பள்ளத்தில் ரூ.3.6 கோடி செலவில் இதய நோயாளிகளுக்கான இதய குழாய் அடைப்பை சரிசெய்யும் இதய உள்ளூடுருவி (cath lab) ஆய்வகம் உள்ளிட்ட ரூ.21.30 கோடி மதிப்புள்ள திட்டப் பணிகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் துவங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில், 'மக்கள் நல்வாழ்வுத் துறை இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளது.
தாய் சேய் நலத் திட்டம் தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. டெங்கு விவகாரத்தில் தமிழகத்தில் இறப்பில்லாத நிலையைத் தொடர்ந்து ஏற்படுத்த, அரசு சார்பில் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொற்று நோய்த் தவிர்க்க முடியாத ஒன்று' எனத் தெரிவித்தார்.