தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலம்: காவல் துறை தீவிர விசாரணை - Kanyakumari crime news

கன்னியாகுமரி: தோவாளை திருமலைபுரம் ரயில்வே பாலத்தின் அருகே அடையாளம் தெரியாத நிலையில் கிடந்த ஆண் சடலம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலம்
தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலம்

By

Published : Mar 20, 2021, 6:09 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை திருமலைபுரம் அருகே ரயில்வே குறுக்கு பாலத்தின் தண்டவாளத்தின் ஓரத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை அவ்வழியாகச் சென்ற மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து, ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே காவல் துறையினர், உயிரிழந்த நபரின் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், நேற்றிரவு (மார்ச் 19) நாகர்கோவில் - கோயம்புத்தூர் விரைவு வண்டியில் பயணம்செய்த நபர் ஒருவரைக் காணவில்லை என ரயில்வே காவல் நிலையத்திற்குப் புகார் வந்துள்ளது.

எனவே காணாமல்போன அந்த நபர்தான் இறந்துகிடந்தவரா? என்ற கோணத்திலும், ரயிலிலிருந்து தவறி விழுந்து இவர் இறந்தாரா? என்று காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details