தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிமாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சூரியன் எழுதல், நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மண்டபம், காமராஜர் மணிமண்டபம் உள்ளிட்டவற்றை கண்டுகளிப்பது வழக்கம்.
கோடை விடுமுறையை கொண்டாட குவிந்த சுற்றுலாப் பயணிகள் - bay watch park
நாகர்கோவில்: பே வாட்ச் பொழுதுபோக்கு பூங்காவில் கோடை விடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சுற்றுலாப் பயணிகள்
அந்த வகையில் கன்னியாகுமரியில் உள்ள பே வாட்ச் பொழுதுபோக்கு பூங்காவிற்கு வெயிலை பொருட்படுத்தாமல் மே 20ஆம் தேதி அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அங்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற சுற்றுலாப் பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
குறிப்பாக நீர் விளையாட்டுகளில் அதிகமானவர்கள் தங்களது பொழுதை கழித்தனர். மேலும், பலவிதமான ராட்டினங்களில் விளையாடி சுற்றுலாப் பயணிகள் குதூகலமாக மகிழ்ந்தனர். இதனால் பொழுதுபோக்கு பூங்கா கலகலப்புடன் காணப்பட்டது.