கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்தவர் முருகன் (42), இவர் ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார் . வழக்கம்போல் நேற்று இரவு டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு விற்பனை பணம் ரூபாய் 5 லட்சத்து 35 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் முருகன் கிளம்பியுள்ளார். அப்போது அவரை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல், முருகனை அரிவாளால் வெட்டிவிட்டு அவரிடம் இருந்த 5 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம், இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
டாஸ்மாக் மேற்பார்வையாளரை அரிவாளால் தாக்கி ரூ.5.35 லட்சம் கொள்ளை! - kanyakumari
கன்னியாகுமரி : ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் டாஸ்மாக் மேற்பார்வையாளரை அரிவாளால் தாக்கி 5 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம், இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கி ரூ.5.35 லட்சம் கொள்ளை!
இதனையடுத்து, தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரல்வாய்மொழி போலீசார் முருகனை மீட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.