கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தோட்டியோடு-சுங்கான்கடை பகுதியில் அக்னிகுளம், பிள்ளை குளம் என இரு குளங்கள் உள்ளன.
இந்த இரண்டு குளங்களையும் ஆக்கிரமித்து சிலர் அதனருகே டீக்கடை, பால் விற்குமிடம், சிறிய பூங்கா போன்றவைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துவருகின்றனர்.
இச்செயலை பொதுப்பணித் துறையினரும் வருவாய்த் துறையினரும் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியினர் தோட்டியோடு அருகே மேளம் அடித்து மறியலில் ஈடுபட்டனர்.
பின்பு அங்கு வந்த பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஆக்கிரமிப்புகளை 15 தினங்களுக்குள் அகற்றப்படும் என உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றாத பொதுப்பணித் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்