தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் தாணுமாலயன் கோயிலில் சித்திரைத் தெப்பத் திருவிழா! - Kodiyetram

நாகர்கோவில்: உலகப் புகழ்பெற்ற தாணுமாலயன் திருக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரைத் தெப்பத் திருவிழாவிற்கான கொடியேற்றம் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது.

KODIYETRAM

By

Published : May 5, 2019, 2:28 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உலகப் புகழ்பெற்ற தாணுமாலயன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் படைத்தல், காத்தல், அழித்தல் தெய்வங்களான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் ஒரே வடிவில் தாணுமாலய சுவாமியாக கருவறையில் அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும்.

மேலும், இக்கோயிலில் இந்திரக் கடவுள் தினந்தோறும் கருவறையில் பூஜை செய்வதாக ஐதீகம் உண்டு. இப்படி மிக பழமைவாய்ந்த இக்கோயிலில் பல நுாற்றாண்டுகளாக வருடந்தோறும் சித்திரை மாதம் 10 நாட்கள் தெப்பத் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும்.

தாணுமாலயன் கோயிலில் சித்திரை தெப்ப திருவிழா கொடியேற்றம்

இந்நிலையில், இந்த வருடத்திற்கான தெப்பத் திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலிருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பத்து நாட்கள் நடைபெறுகின்ற இந்தத் திருவிழாவில் முக்கியத் திருவிழாவாக 9ஆம் திருவிழாவில் காலையில் திருத்தேர் வடம்பிடித்து இழுக்கும் தேரோட்ட நிகழ்ச்சியும், 1௦ஆம் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெற இருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details