தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நன்மை செய்ய வெற்றி பெற்றிருக்கிறேன்' -வசந்தகுமார் எம்.பி - kanniyakumari

கன்னியாகுமரி: மக்களுக்கு நன்மை செய்ய ஆண்டவன் என்னை வெற்றி பெறச் செய்திருக்கிறார் என வசந்தகுமார் எம்.பி தெரிவித்துள்ளார்.

வசந்தகுமார்

By

Published : Jun 22, 2019, 1:09 PM IST

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் எம்பி வெற்றி பெற்றார். இதனையடுத்து வாக்களித்தவர்களுக்கும், வெற்றிக்காக உழைத்த கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்க பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்நிகழ்ச்சி சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயில் எதிரேயிருந்து தொடங்கியது. இதில் திமுக கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வசந்தகுமார் எம்.பி பேசுகையில், ”மக்களுக்கு நன்மை செய்ய ஆண்டவன் என்னை வெற்றி பெறச் செய்திருக்கிறார். ஏற்கெனவே இரண்டு முறை நான் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்துள்ளேன். மக்களுக்கு நன்மை செய்ய வசந்தகுமாரால் முடியுமா என்று கேட்கிறார்கள். கடவுளின் அருளாலும், காங்கிரஸின் ஆதரவாலும் கூட்டணிக் கட்சிகளின் உறுதுணையோடும் மக்களை திருப்திப்படுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details