குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் உள்ளாட்சி மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் லூர்தம்மாள் சைமனின் 17ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று குமரி மாவட்டப் பகுதிகளில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. அதில் அவரின் உருவப்படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
'லுார்தம்மாள் சைமனுக்கு முழுவுருவ சிலையுடன் மணிமண்டபம் கட்டுக!' - kanniyakumari
நாகர்கோவில்: முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமனின் 17ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி குமரி கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் மணக்குடியில் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக குமரி கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் மணக்குடியில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவி அருள் சபிதா ரெக்ஸிலின் தலைமை வகித்தார். மேல மணக்குடி பங்குத்தந்தை க்ளிட்டஸ் முன்னிலை வகித்தார். மேலும், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவரும், நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினருமான வசந்தகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் லூர்தம்மாள் சைமனுக்கு முழுவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டவேண்டும். மேலும் குமரி மாவட்டத்தில் அமையப்போகும் மீன்பிடித் துறைமுகத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் மீனவப் பிரதிநிதிகள், மீனவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.