கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்துள்ள திருமூல நகர் குருசுமலையில், கலப்பை மக்கள் இயக்க உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு திரைப்பட தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவருமான பி.டி. செல்வகுமார் தலைமை வகித்தார்.
எஸ்.பி.பி. நினைவாக இசைக்கல்லூரி தொடங்க வேண்டும் - கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி. செல்வகுமார் தலைமை
கன்னியாகுமரி: மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவாக தமிழ்நாட்டில் இசைக்கல்லூரி மற்றும் இசை பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி.செல்வக்குமார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
![எஸ்.பி.பி. நினைவாக இசைக்கல்லூரி தொடங்க வேண்டும் tn-govt-should-start-a-music-college-in-spb-memory](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:28:12:1602399492-tn-knk-02-director-ptsevakumar-script-tn10005-11102020114957-1110f-1602397197-350.jpg)
tn-govt-should-start-a-music-college-in-spb-memory
அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "மறைந்த திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இறப்பு தாங்கமுடியாத துயரம். அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் அற்புதமானவை. அவரது இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாகவும் அவரை கவுரவிக்கும் வகையிலும் அவரது பெயரில் இசைக்கல்லூரி மற்றும் இசை பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் திறக்க வேண்டும்" என்றார்.