தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறைந்த முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் நினைவேந்தல், புத்தக வெளியீட்டு விழா! - மறைந்த கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர்

கன்னியாகுமரி: குமரி வரலாற்று கூடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி சார்பில் மறைந்த முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் நினைவேந்தல், புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

குமரியில் மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமாரின் நினைவேந்தல், புத்தக வெளியீட்டு விழா!
குமரியில் மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமாரின் நினைவேந்தல், புத்தக வெளியீட்டு விழா!

By

Published : Oct 20, 2020, 5:06 PM IST

கன்னியாகுமரி வரலாற்று கூடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி சார்பில் மறைந்த கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் நினைவேந்தல் மற்றும் வள்ளல் ஹெச். வசந்தகுமார் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

காங்கிரஸ் இலக்கிய அணி பொருளாளர் சேம் மோகன்ராஜ் தலைமையில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் நூலை வெளியிட நாடார் மகாஜன சங்க பொருளாளர் கரிக்கோல்ராஜ் பெற்றுக்கொண்டார்.

குமரியில் மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமாரின் நினைவேந்தல், புத்தக வெளியீட்டு விழா!

நிகழ்ச்சியில் காங்கிரஸ் இலக்கிய அணி மாநில தலைவர் நாஞ்சில் கி.ராஜேந்திரன், மாநில ஓபிசி செயலாளர் ஸ்ரீனிவாசன் வர்த்தக காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் செல்லத்துரை மற்றும் இலக்கிய அணி நிர்வாகிகள் சிவகங்கை தர்மன், ஜோசப் ராஜ் மரிய அருள்தாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க...விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் கனிமொழி

ABOUT THE AUTHOR

...view details