தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் இரட்டைக்கொலை -சரணடைந்த கொலையாளி! - tutucorin two murder

கன்னியாகுமரி : தூத்துக்குடியில் நடந்த இரட்டைக் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி நாகா்கோவில் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

arrested

By

Published : Sep 18, 2019, 8:46 AM IST

தூத்துக்குடி மாவட்டம் சிவந்தான்குளம் கோயில் கொடை விழாவின்போது நீயூ காலனி முனுசாமிபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணிக்கராஜ் (21) என்பவர் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றார்.

அப்போது அதேப் பகுதியைச் சேர்ந்த முருகேசன், விவேக் ஆகிய இருவரும், 'ஏம்ப்பா இவ்வளவு ஸ்பீடா வர்றீங்க...!' எனக் கேட்டனர். இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது கூட்டாளிகளை கும்பலாக அழைத்துவந்து முருகேசன், விவேக் ஆகிய இருவரையும் வெட்டிப் படுகொலை செய்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் தூத்துக்குடி நகர் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இரட்டைக் கொலை செய்த இளைஞர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரண்

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த கும்பலை தேடிவந்தனர். இந்தக் கொலை சம்பவத்தில் முதல் குற்றவாளியான மணிகண்டன் என்ற மாணிக்கராஜ் நேற்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மணிகண்டன் சரணடைந்த நிலையில் காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details