கன்னியாகுமரி: பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான திருவட்டார் அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும், திருவிளக்கு பூஜை நடைபெற்று வந்தது. ஆனால், கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த 2016ஆம் ஆண்டிற்கு பிறகு திருவிளக்கு பூஜை நடைபெறவில்லை.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருவிளக்கு பூஜை... - Tiruvilakku Pooja at Adhikesava Perumal Temple
கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற, திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 6 ஆண்டுகளுக்கு பிறகு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருவிளக்கு பூஜை
இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 6ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்தும் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு திருக்கோயிலின் சுற்று வெளிபிரகாரத்தில் அமர்ந்து திருவிளக்கு பூஜை செய்தனர். இதேபோல் பக்தர்கள் ஆலயத்தை சுற்றி லட்சதீபம் ஏற்றியும் வழிபட்டனர்.
இதையும் படிங்க:சங்கரதாஸ் சுவாமி நினைவு தினம்... ஆட்டம் போட்ட விஜய் ஆண்டனி