கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானவர், கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலாப் படகுகளில் சென்று பார்வையிடுவதற்கு அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் பண்டிகை காலம் மற்றும் விடுமுறை காலங்களில் சுற்றுலா படகுகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா என்ற மூன்று சுற்றுலா படகுகள், தினசரி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கப்படுகின்றன. இந்தச் சூழலில் கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி முதல் திருவள்ளுவர் சிலையினை பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வந்ததால், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.