தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காந்தி மண்டபத்தில் அத்துமீறும் 'டிக் டாக்' காதலர்கள்! - காந்தி மண்டபம்

நாகர்கோவில்: காந்தி மண்டபத்தில் காதலர்கள் ஆபாசமாக டிக் டாக் பதிவுகளை பதிவு செய்வது பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

file pic

By

Published : Apr 28, 2019, 2:49 PM IST

இளம் சந்ததிகளிடம் தற்போது டிக் டாக் செயலி மிக பிரபலமாகி உள்ளது. இதில் காதலர்கள் தன் காதலிகளுடனும், கணவர்கள் தங்கள் மனைவிகளுடனும், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தனித்தனியாகவும் சினிமா பாடல்கள் மற்றும் சினிமா வசனங்களுக்கு ஏற்ப நடித்து வாட்ஸ்அப் மற்றும் இணையதளம் மூலம் அனுப்பிவருகின்றனர்.

இதற்கு ஒரு படி மேலே செல்லும் சிலர் ஆபாச பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு ஏற்ப முக பாவனை மற்றும் உடல் அங்க அசைவுகளைக் காட்டித் தங்கள் டிக் டாக்கை பார்க்க இளம் சமுதாயத்தினரை ஈர்க்கின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர், காதலர்கள் அமைதியான தியானத்தில் ஈடுபடும் காந்தி மண்டபத்தில் அத்துமீறி சில்மிஷங்களில் ஈடுபட்டு ஆபாசமாக டிக் டாக் பதிவுகளை பதிவு செய்கின்றனர். இந்த அநாகரிக செயல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

file pic

டிக் டாக் செயலியை சமீபத்தில் நீதிமன்ற தடை செய்து, பின் சில நிபந்தனைகளுடன் தடையை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details