கன்னியாகுமரி:குமரியில் தற்போது பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேகம், தேவாலயங்களில் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அணிந்து வரும் நகைகள் காணாமல் போனதாக பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் வந்துள்ளன.
இதனை கருத்தில் கொண்டு மாவட்ட காவல் துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவந்தனர். விழாக்களின்போது பக்தர்களின் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஒரு கும்பல் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களைப் பிடிக்கக் காவல் துறையினர் கண்காணிப்பு பணியினை மேலும் தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் நேற்று இரணியல் அருகே உள்ள புகழ் பெற்ற சிவன் கோயில் ஒன்றில் கும்பாபிஷேக நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில், பங்கேற்ற பக்தர் விஜயலட்சுமி என்பவரின் 2 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துத் தப்பியோடிய நிலையில் அவர் அங்கிருந்த இரணியல் காவல் துறையினரிடம் தகவலளித்தார்.