கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கொள்ளத்தான்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். கடந்த 2014ஆம் ஆண்டில் ராஜனின் மனைவியை அதே ஊரை சேர்ந்த ரெஜி என்பவர் கிண்டல் செய்துள்ளார். அதற்கு ராஜன் நியாயம் கேட்க சென்றபோது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கொலை வழக்கு- கணவன் மனைவிக்கு ஆயுள் தண்டனை வீதித்து அதிரடி தீர்ப்பு - கன்னியாகுமரி
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கணவன் மனைவி உள்ளிட்ட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அப்போது, ரெஜி அவரது மனைவி அஜிதா மற்றும் நண்பர் ராஜி ஆகியோர் சேர்ந்து ராஜனை கல்லால் தாக்கியதில் படுகாயம் அடைந்த அவர் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மார்த்தாண்டம் காவல் துறையினர் ரெஜி, ராஜி, அஜிதா ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை நாகர்கோவிலில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி நம்பி அமர்விற்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது, ராஜனை கொலை செய்த கணவன் மனைவி ரெஜி -அஜிதா மற்றும் அவர்களது நண்பர் ராஜி ஆகிய மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.