கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகேவுள்ள படபச்சை பகுதி தனியார் மதுபான பார் ஒன்றில், திருவரம்பு பகுதியைச் சேர்ந்த மகேஷ்(25), விஜயன்(44), பால்ராஜ்(42) ஆகிய மூவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர், மூவரும் வீடு திரும்ப இருசக்கர வாகனத்தில் ஏறி பாரை விட்டு வெளியே வரும்போது அவ்வழியே வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
புத்தாண்டில் மது கொண்டாட்டம் - லாரி மோதி உயிரிழந்த மூவர்! - கன்னியாகுமரி மாவட்டச் செய்திகள்
குமரி: களியல் அருகே புத்தாண்டை கொண்டாட மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற மூவர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
![புத்தாண்டில் மது கொண்டாட்டம் - லாரி மோதி உயிரிழந்த மூவர்! kanniyakumari](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5563085-thumbnail-3x2-k.jpg)
kanniyakumari
விபத்து ஏற்பட்ட பகுதி
இதையடுத்து லாரியை ஓட்டிவந்தவர், லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். தகவலறிந்து அங்கு விரைந்த அருமனை காவல்துறையினர், மூவரின் உடல்களையும் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கார் மரத்தில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு!