தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆரல்வாய்மொழி வனப்பகுதியில் வேட்டையாடிய மூவர் கைது - ஆரல்வாய்மொழியில் வேட்டை

கன்னியாகுமரி : ஆரல்வாய்மொழி வனப் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வேட்டையாடிய மூன்று பேர் பிடிபட்ட நிலையில், அவர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

forests  Three arrested for hunting  hunting  ஆரல்வாய்மொழியில் வேட்டை  வனவேட்டை, கைது, ஆரல்வாய்மொழி
forests Three arrested for hunting hunting ஆரல்வாய்மொழியில் வேட்டை வனவேட்டை, கைது, ஆரல்வாய்மொழி

By

Published : Jun 1, 2020, 11:49 AM IST

ஆரல்வாய்மொழி, தெற்குமலை மேற்கு பீட் வனப்பகுதிக்குட்பட்ட தோவாளை கோழிக்கோட்டுப்பொத்தை வனச்சரக பகுதியில், சட்டத்திற்கு புறம்பாக வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலின் பேரில் மாவட்ட வன அலுவலர் அசோக் குமாரின் உத்தரவின்பேரில் வனக் காவலர்கள் அப்பகுதியில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அங்கு வன விலங்குகளை வேட்டையாடிய, ஆரால்வாய்மொழியை அடுத்த இராஜாவூரை சேர்ந்த, அருள் வினிஸ்டன் (வயது 28), மைக்கேல் கனகரவி (வயது 28), டென்னிஸ் ராஜா (வயது 30) ஆகிய மூன்று இளைஞர்களையும் வனக் காவலர்கள் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

தொடர்ந்து இவர்கள் மூவருக்கும், தலா 15 ஆயிரம் வீதம் 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து விடுவித்தனர்.

இதையும் படிங்க: வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றிய நபர் கைது!

ABOUT THE AUTHOR

...view details