குமரி மாவட்டம் தோவாளையில் அமைந்திருக்கும் பூ மார்க்கெட் மிகவும் பிரபலமானதாகும். இங்கிருந்து கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
குமரியில் பூக்களின் விலை குறைவால் வியாபாரிகள் மகிழ்ச்சி. - பூக்கள் விலை
நாகர்கோயில்: தோவாளை பூ மார்க்கெட்டுக்கு வரும் பூக்களின் அளவு அதிகரித்துள்ளதாலும், பூக்களின் விலை குறைந்ததாலும் சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக பூக்களின் உற்பத்தி குறைந்ததால், சந்தைக்கும் வரத்து குறைந்தது உள்ளது. இதனால் பூக்கள அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் ஓரளவு மழை குறைந்துள்ளதால் பூக்களின் உற்பத்தி அதிகரித்ததால், சந்தைக்கு வரும் பூவின் அளவும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக உச்சத்திலிருந்த பூக்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக சந்தையில் பிச்சிப்பூ முன்பு ரூ.600 தற்போது ரூ.200க்கும், மல்லிகைப்பூ முன்பு ரூ.400 தற்போது ரூ.150க்கும், கனகாம்பரம் முன்பு ரூ.500 தற்போது ரூ.200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ரோஜா, தாமரை போன்ற பூக்களின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது சில்லரை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.