கன்னியாகுமரியில் நாளை மறுநாள் (ஏப்.16) ஒரு அதிசயம் நடக்க உள்ளது. ஒரே நாளில் சூரியன் மறையும் நேரத்தில் நிலவு உதிக்கும் அரிதானக் காட்சி நடைபெற உள்ளது. ஒவ்வொரு சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் சூரியன் மறைவதும், பின் அதேநேரத்தில் சந்திரன் உதயமாகி காட்சியளிப்பதும் நடக்கிறது.
இத்தகைய காணக் கிடைக்காத அரியக் காட்சி நாளை மறுநாள் (ஏப்.16) சனிக்கிழமையன்று நடைபெற இருக்கிறது. இதைக் காண ஏராளாமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதனையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.