தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அய்யன் திருவள்ளுவரை கொண்டாடும் தமிழ் பெருமக்கள் - thiruvalluvar birthday celebration

கன்னியாகுமரி: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மக்கள் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

thiruvalluvar
thiruvalluvar

By

Published : Jan 16, 2020, 8:15 PM IST

தமிழ்நாடு முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தினர். பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்து மகான் திருவள்ளுவரை வணங்குகிறேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை திருக்குறள் பேரவை சார்பில் திருவள்ளுவர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் கிராமிய நாடகக் கலைஞர்கள் திருவள்ளுவர் வேடம் அணிந்து கலந்துகொண்டனர். இதில் திரளான தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

அதேபோன்று கன்னியாகுமரியில், முக்கடல் சங்கமிக்கும் கடல் நடுவில் உள்ள பாறையில் அமைந்திருக்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. உலக தமிழர் பேரமைப்பு, தமிழ் வழிபாட்டு மன்றம் சார்பில் திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிறுவர், சிறுமியர் உட்பட ஏராளமானோர் திருக்குறள்களை பாடி மரியாதை செய்தனர்.

அலிகார் முஸ்லிம் பல்கலை தேர்வுகள் நிறுத்தி வைப்பு!

இதுகுறித்து சங்கவை மணவாளன் கூறுகையில், "மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து தத்துவங்களும் திருக்குறள் என்ற ஒரே நூலில் உள்ளது. திருக்குறளை ஒவ்வொருவரும் கற்றுத் தெளிந்தால் வாழ்வின் உன்னத நிலையை அடைய முடியும். இத்தகைய சிறப்பான நூலை தந்ததற்காக திருவள்ளுவரை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details