கன்னியாகுமரி கடலில் கடந்த 2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. அதன் 21ஆவது ஆண்டு விழா இன்று (ஜனவரி 1) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம் சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள் மரியாதை...! - கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம்
கன்னியாகுமரி: குமரி கடலில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 21ஆவது ஆண்டை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
thiruvalluvar-statue
கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று காரணமாக படகு சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் தமிழ் அமைப்பினர் கொண்டுவந்த மரத்தினாலான சிறிய திருவள்ளுவர் சிலையை, படகுத்துறையின் வளாகத்தில் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.