தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜம்மு-காஷ்மீரில் அமையவுள்ள திருப்பதி தேவஸ்தான கோயில்!

திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீரில் விரைவில் கோயில் அமைக்கப்படும் எனத் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

thirupathi devasthanam festival in kanyakumari
ஜம்மு-காஷ்மீரில் அமையவுள்ள திருப்பதி தேவஸ்தான கோயில்

By

Published : Jan 27, 2021, 6:51 PM IST

கன்னியாகுமரி: திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி, சென்னை ஆலோசனை மையத் தலைவருமான சேகர் ரெட்டி ஆகியோர் இன்று கன்னியாகுமரியிலுள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெற்ற வருஷாபிஷேகத்தில் பங்கேற்றனர். அதன்பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது, "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் திருப்பதி கோயிலின் கட்டுப்பாட்டில் இயங்கும் வெங்கடாச்சலபதி கோயில் கட்டப்பட உள்ளது. இதற்காக 10 ஏக்கர் நிலம் ஜம்மு-காஷ்மீர் அரசு வழங்கியுள்ளது.

விரைவில் அங்கு கட்டுமானப்பணிகள் தொடங்கும். இதேபோன்று, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள 35 தேவஸ்தான கோயில்களுக்கு, திருப்பதி தேவஸ்தானம் மூலம் கோ பூஜைக்காக பசு, கன்றுகள் வழங்கப்படவுள்ளன. தனியார் கோயில்களுக்கும் பசு வழங்கப்படும்.

திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி பேட்டி

ஆனால், கோபூஜை நடத்த வேண்டும் என்பது கட்டாயம். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஏழைகளுக்கு விரைவில் இலவச திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தேவஸ்தானத்தில் நடக்கும் திருமணங்களுக்கு கோயில் மூலமாக இலவச தாலி வழங்கப்படும். திருமணம் நடத்த விரும்புவோர் 15 தினங்களுக்கு முன்னர் தேவஸ்தானத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திர நிர்வாகம் ஐந்து ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது. இதில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோசாலை, திருமண மண்டபம் அமைக்கப்படும். தற்போது, தேவஸ்தான கோயிலில் உள்ள கொடிமரம் கடல் காற்றினால் அரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விரைவில் தங்க முலாம் பூச ஏற்பாடு செய்யப்படவுள்ளது. குமரியில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலில் பக்தர்களின் கோரிக்கையின் படி பிரம்மாண்ட கருடாழ்வார் சிலை நிறுவப்படும். மேலும், கன்னியாகுமரி பகுதியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மிகப்பெரிய அளவில் பக்தர்களின் வசதிக்காக கோயில் குறித்து தெரிந்து கொள்வதற்காக ஆர்ச் அமைக்கப்படும்" என்றனர்.

இதையும் படிங்க:பூதலிங்க சாமி கோயிலில் தை திருவிழா தேரோட்டம்

ABOUT THE AUTHOR

...view details