உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்த வரையிலும் பிரபல சுற்றுலாத் தலங்களான முக்கடல் சங்கமம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்துவிட்டது.
பத்மநாபபுரம் அரண்மனைக்கு சுற்றுலாப் பயணிகள் வர கேரள அரசு தடை விதித்துள்ளது. களியக்காவிளை, மார்த்தாண்டம், குழித்துறை போன்ற பகுதிகளில் செயல்படும் திரையரங்குகளும் மாநில அரசின் உத்தரவுப்படி மூடப்பட்டுள்ளன.