கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள அஞ்சு கண்டரை பகுதியில் கால்வாயில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் அனிஷ் (வயது 30), அவரது மனைவி மஞ்சு மற்றும் ஒன்றரை வயது குழந்தை அமர்நாத் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களது உடலை அரசு மருத்துவமனையில் பாதுகாக்க வசதி இல்லாததால் அருகில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாத்து வைத்திருந்தனர்.
இந்நிலையில், உடற்கூறு ஆய்வுக்காக குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு உடல்களைக் கொண்டுசென்றபோது, அங்கு உடற்கூறு ஆய்வுக்கு தேவையான தண்ணீர், ஊழியர்கள் கையில் அணிந்துகொள்ள கிளவுஸ் உள்ளிட்டவை இல்லாததால் ஊழியர்கள் உடல்களை உடற்கூறு செய்யாமல் இருந்துள்ளனர்.