கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து நடைப்பெற்று வரும் கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 22ஆம் தேதி களியல் காவல் நிலையம் மற்றும் வனத்துறை அலுவலகம் அருகே உள்ள இரு கடைகளில் கொள்ளையர்கள் புகுந்து நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
போலீசாரை கண்டித்து ஒரு நாள் கடையடைப்பு போராட்டம்! - POLICE
கன்னியாகுமரி: இரண்டு கடைகளில் நடைப்பெற்ற கொள்ளை சம்பவம் குறித்த சிசிடிவி வீடியோ கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து இன்று களியல் பகுதியில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு நாள் கடையடைப்பு போராட்டம்; நூற்றுக்கு மேற்ப்பட்ட கடைகள் அடைப்பு
அதற்கான சிசிடிவி காட்சிகளைக் கொடுத்தும் காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக கடை உரிமையாளர்கள் குற்றாச்சாட்டி வந்தனர். இந்நிலையில், இன்று களியல் தொழில் வணிகர் சங்கம் சார்பில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால், களியல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.